நடிகை கயாடு லோகர் பிறந்தநாள் – சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘தி பாரடைஸ்’ படக்குழு வாழ்த்து…!

நடிகை கயாடு லோகரின் பிறந்த நாளையொட்டி ’தி பாரடைஸ்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகை கயாடு லோகர், கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதயம் முரளி, இம்மோர்டல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் கயாடு லோகர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை கயாடு லோகர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தி பாரடைஸ்’.எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை நானியின் ‘தசரா’ படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திய ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.