ஜனநாயகன் படக்குழு இதை தீர விசாரிக்கனும்… – இயக்குநர் சேரன் எழுப்பியுள்ள முக்கிய கேள்வி…!

நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக இயக்குநர் சேரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் –  ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் நேற்று ‘ஜன நாயகன்’ முழு படமும் இணையத்தில் வெளியாகி ஒட்டு மொத்த திரையுலகினரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஜினி காந்த், சிரஞ்சீவி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பல பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் சேரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;  “ஒரு திரைப்படம் watermark போட்டு அனுப்பப்படுதுன்னா அது dubbing, SFX, RR, DI, Mix இந்த டிபார்ட்மெண்ட்க்கு தான் போகும்.. அந்த டிபார்ட்மெண்ட்களுக்கு மட்டும்தான் watermark போடுவொம் .. இல்லை ஏதாவது வியாபார விசயமா அனுப்புனா மட்டும் For Businesse purpose, Festival copy, Censor copy இப்படி போடுவோம்…

எல்லா காட்சிகளையும் தொகுத்து அனுப்பும் எடிட் ல இருந்து இதுவதை Edit Ref னு or Edit copy னு சொல்லி அனுப்புனதே இல்லை… அதுவும் எடிட்ல தான் படமே ரெடியாகும்… அப்போ அவங்களுக்கு அந்த water mark போட்டு எப்படி வரும்… ஜனநாயகன் குழு இதை தீவிரமா விசாரிக்கனும் அல்லது போலீஸ் இதை தீவிரமாக விசாரிக்கனும்..

எங்கயோ தவறு உள்ள இருந்தே நடந்திருக்கு. Edit Ref னு போடும்போது அதுல final mix copy யா இருக்க வாய்ப்பில்லை… Jan14 தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.. கிட்டத்தட்ட படம் வெளியாகி 5 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய நேரம்.. அதுவும் water mark ரொம்ப தெளிவா வெள்ளை நிறத்தில் பளிச்சின்னு இருக்கு.. ஆக இந்த களவு edit துறை சார்ந்தவர்களை வீணாக குற்றவாளிகளாக்கும்.. அல்லது மற்ற கலைஞர்களின் நன்மதிப்பை செடுக்கும்..

அறிவார்ந்த திரைத்துறை நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்கவும்… களவு நமது இண்டஸ்ட்ரி ஆட்களால் நடந்ததா.. இல்லை நமது இண்டஸ்ட்ரியை பயன்படுத்துகிறார்களா என சிந்திக்கவேண்டும்.. ஆனால் பெரும் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை திருடர்கள் மனசாட்சியின்றி வெளியிட்டு இப்படி தரம் கெட்டு நடப்பதை ஒரு இயக்குனராக கண்டிக்கிறேன்… ஜனநாயகம் கேள்வியாகி கொண்டிருக்கிறது.. நடவடிக்கை தேவை..

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.