அம்பானி இல்ல திருமண விழாவில் திருட்டு: திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது!

குஜராத்தில் முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் கார் கண்ணாடியை உடைத்து,  ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான…

குஜராத்தில் முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் கார் கண்ணாடியை உடைத்து,  ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்,  என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன.  இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள்,  தொழில்அதிபர்கள்,  விளையாட்டு வீரர்கள்,  சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  ஜாம்நகரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,  அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் உள்ளிட்டவை திருடப்பட்டதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார்,  திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 5 பேரை டெல்லியில் கைது செய்தனர்.  மேலும்,  இந்த திருட்டு கும்பலின் தலைவன் மதுசூதனை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.