முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் படி முதல்வராக பதவியேற்ற மேடையிலேயே அதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான ஐஜியாக பவானிஸ்ரீ நியமிக்கப்பட்டார். மேலும் இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அது மட்டுமின்றி படைக்கான சீருடையும் வெளியிடப்பட்டது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ந்தேதி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் துவக்க விழா தற்போது தொடங்கியுள்ளது. முன்னதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அணிவகுப்பை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.




