முதலமைச்சர் விஜய் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது :
ஒரு சில நிகழ்ச்சி மட்டும் தான் மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கும். இந்த திட்டத்தை தொடங்கி வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஒவ்வொரு பெண்களும் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று சொன்னோம். அது தேர்தலுக்காக இல்லை. மனதில் இருந்து சொன்னது. மனப்பூர்வமாக சொன்னது. சொன்னவை அனைத்தையும் செயலில் கொண்டு வர வேண்டும்
ஆட்சிக்கு வந்த குறைந்த நாட்களில் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். பெண்கள் பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையோடும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசு நோக்கம்.
பல செய்திகளை கேட்கும் பொழுது மனசு பதறுகிறது. மற்றவர்கள் போல் ரீல்ஸ் ஆக பார்க்க முடியாது. ரியாலிட்டியதாகத்தான் பார்க்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
இந்த பிரச்சனை கடந்த மாதம் வந்தது அல்ல. பல ஆண்டுகளாக இருக்கக்கூடியது. இந்த பிரச்சனையை கண்டுக்காம விட்டது யார் என்று உங்களுக்குத் தெரியும். அதை பேசுவது வேஸ்ட். போதை பொருள் கட்டுப்படுத்தினால் நாடு சிறப்பாக இருக்கும். இவை இரண்டையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். சட்ட ஒழுங்கு பாதுகாப்பு மட்டும் இல்லை இதில் சமூக ஒழுக்கமும் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுத்திவிட்டு சாதாரணமாக செல்பவர்களுக்கு ஒரு வார்னிங்காக நான் இதை சொல்லுகிறேன். பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கான தண்டனை கடுமையாக இருக்கும். குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்போம் .
பெண்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களுக்கு கூடுதல் சிறப்புகள் இடம் பெறும். இந்த திட்டத்திற்கு 354 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 2500 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ட்ரோன் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் பெண்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தை கொண்டு வந்த காவல்துறையினருக்கு மிகவும் நன்றி. இது ஒரு அரசின் முதல் வெற்றி முழுமையான வெற்றி. ஒரு அரசு வெற்றி பெற வேண்டுமென்றால் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.




