தமிழ் நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…!

தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததையடுத்த ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

பணியிட மாற்றங்கள் மற்றும் நியமனங்கள்

(i) பொதுப்பணித் துறை அரசு முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு. ஷுன்சோங்ம் ஜடக் சிரு, IAS, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார் (டாக்டர் ஆர். செல்வராஜ், IAS அவர்களுக்குப் பதிலாக)

(ii) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆர். செல்வராஜ், IAS பொதுப்பணித் துறை அரசுச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார். (திரு. ஷுன்சோங்ம் ஜடக் சிரு, IAS அவர்களுக்குப் பதிலாக)

(iii) தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசுச் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு. சந்தீப் நந்துரி, IAS, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார். (ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட திரு. சஜ்ஜன்சிங் ஆர். சவான், IAS அவர்களுக்குப் பதிலாக)

(iv) மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத் தலைவராகப் பணியாற்றி வரும் திருமதி பி. உமா மகேஸ்வரி, IAS, கைத்தறித் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார். (ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், IAS அவர்களுக்குப் பதிலாக)

(v) பேரூராட்சிகள் இயக்குநராகப் பணியாற்றிய திரு M. பிரதீப் குமார், IAS, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். (டாக்டர் S. சுரேஷ் குமார், IAS-க்கு பதிலாக)

(vi) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அரசுத் துணைச் செயலாளராகப் பணியாற்றும் திருமதி R. அழகுமீனா, IAS, இடமாற்றம் செய்யப்பட்டு, மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார்; இப்பணியிடம்புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ( உமா மகேஸ்வரி, IAS-க்கு பதிலாக)

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டாக்டர் R. சுரேஷ் குமார், IAS, அவர்களின் சேவைகள் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்படுவதற்காக அவ்வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. (ஓய்வுபெற்ற திரு V. சம்பத், IAS, அவர்களுக்குப் பதிலாக)

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலத் துணை ஆணையர் (வடக்கு) திருமதி சித்ரா விஜயன், IAS, அவர்களின் சேவைகள், அப்பேரியத்தின் துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) நியமிக்கப்படுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.