உசிலம்பட்டி அருகே கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற மனைவி!

உசிலம்பட்டி அருகே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு மனைவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

உசிலம்பட்டி அருகே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன்
மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு மனைவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்மணி
– பவுனம்மாள் தம்பதி.  இவர்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ள நிலையில்  தங்களது தோட்ட பகுதியில் வசித்து வருகின்றனர்.

கணவன், மனைவி இருவரிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.  இந்த நிலையில்  இருவரிடையே வழக்கம் போல் இன்று (ஜன.27) ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி பவுனம்மாள், கணவன் பால்மணி மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயன்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:  “உங்களை சிரிக்க வைப்பது தான் என்னுடைய எண்ணம்… யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” – நடிகர் சந்தானம்

இது தொடர்பாக தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல்துறையினர், அக்கம்
பக்கத்தினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து
பவுனம்மாளையும், எண்ணெய் ஊற்றியதில் படுகாயமடைந்த பால்மணியையும் மீட்டு
சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்,  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.