திரிஷ்யம் 1 மற்றும் 2 ஆகிய பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது திரிஷ்யம் 3 ஆம் பாகம் அண்மையில் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில் 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மேலும் இப்படம் ஜூன் 18 (நாளை) ஆம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் திரிஷ்யம் 3′ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக ‘திரிஷ்யம் 3’ படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளை தன்வசம் வைத்துள்ள ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது. அதில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், வெளியிட்டாளர் உள்ளட்டோர் திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் நீதிமன்றமானது எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் ‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.




