INDvsAFG: 2 வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி…!

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் சதம் விளாசினர்.

இதனை தொடர்ந்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 79 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து இப்போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.