வினாத்தாள் கசிவு என்பது பில்லியன் மதிப்புள்ள மோசடி – அரவிந்த் கெஜ்ரிவால்…!

தேர்வு வினாத்தாள் கசிவுகள் என்பது பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு மோசடி என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நீட் மறு தேர்வு ஜீன் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையில் டெலிகிராம் மூலமாக நீட் வினாத்தாள் கசிந்ததால் அச்செயலியை இந்திய அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசுக்கு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் எண்ணம் துளியும் இல்லை. அதனால்தான் இதுபோன்ற அபத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ராணுவக் கப்பல்கள் மூலம் வினாத்தாள்களை கொண்டு செல்வது, டெலிகிராமை முடக்குவது, இது போன்ற நடவடிக்கைகள் காகிதக் கசிவுகளைத் தடுத்து நிறுத்துமா? நிச்சயமாக இல்லை.

வினாத்தாள் கசிவுத் என்பது பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு மோசடி. பணம் மேல்மட்டம் வரை செல்கிறது. வினாத்தாள் கசிவுகள் தடுக்கப்பட்டால், எம்.எல்.ஏ.க்கள்/எம்.பி.க்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து வரும்..?” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.