ஆசிரியர் தேர்வு இலக்கியம் கட்டுரைகள் தமிழகம் பக்தி செய்திகள்

வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)


சுப்பிரமணியன்

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை.        பழம்பெரும் முனிவர் நாரதரைப் பற்றி, நம் அனைவருக்குமே தெரியும். ஏராளமான புராணங்களில் சிறப்பாகப் பேசப்படுபவர். பாகவதம், கந்த புராணம், மாயூரப் புராணம், திருவிளையாடற் புராணம், மச்ச புராணம், விநாயக புராணம், இன்னும் ஏராளமான புராணங்கள் இவரைப் பற்றி கூறும். இது தவிர, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், நைடதம், கலிங்கத்துப்பரணி, அகலிகை வெண்பா போன்ற பல இலக்கிய நூல்களிலும் இவர் புகழினை அறியலாம். இவரின் கதை மட்டுமின்றி, இவர் மூட்டி விட்ட கலகக்கதைகளும் நம்மை கலகலப்பாக்கி , அது எப்படி நன்மையில் முடிந்தது என்பதை எடுத்துச் சொல்லும் பாங்கில் நம் மனதைப் பறி கொடுப்போம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அன்று முனிவர்களின் தலைவராக இருந்த, கோபத்திற்கும்,சாபத்திற்கும் பெயர் பெற்ற துருவாச முனிவர், பிரும்மாவைச் சந்திக்க சென்று கொண்டிருந்தார். வழியில், அழகி ஒருவள் எதிர்பட்டு அவரை வணங்கி எழுந்து, தன் கையில் வைத்திருந்த அழகிய வண்ண மலர்களால் கவனமாக, கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்ட மாலை ஒன்றினை சமர்ப்பித்து, ஏற்றுக்கொள்ள வேண்டி நிற்க, முனிவரும் மகிழ்ந்து அதை ஏற்றுக்கொண்டு நடந்தார்.

வழியில் இந்திரன், தனது வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்தான். முனிவரைக்கண்ட பொழுதில், அவரைத் தொழுது நின்றான். அவனுக்கு ஆசி கூறும் விதமாகத் தன் கையில் வைத்திருந்த அழகிய மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ,அதைத் தன் யானை மீது வைத்தான். யானை அந்த மாலையைத் தன் மந்தகத்திலிருந்து துதிக்கையால் எடுத்துச் சிதறி அடித்தாற்போல கீழே எறிந்தது. அதன் சுபாவமிது .

இதையும் வாசிக்கலாம் – எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)

அதைக்கண்ட துருவாசருக்கு உடன் அடக்கமுடியாத சினம் தோன்றி, கோபத்தில் முகம் இறுகியது. “செல்வ செருக்கு உன் கண்ணை மறைத்தது போலும். நான் தந்த மாலையை நீ அணியாது, யானையின் மீது வைத்துப் பாழாக்கினாய், செல்வத்திற்கு தலைவியாகிய இலக்குமி திருமகளுடைய அருள் கடாட்சம் உன்னை விட்டு நீங்குவதாகுக” என சாபமிட்டுச் சென்றார்..

இவ்வாறு தாம் செய்த தவறு, இந்திரனை பாதித்துவிட்டதால் மனம் நொந்த யானை, சொல்லொண்ணா துயரத்திற்கு ஆட்பட்டது. ஏதாவது செய்து தலைவனின் துயர் துடைத்திட வேண்டும் என உறுதி பூண்டது. மனம் நொந்தது. அந்த சமயம் நாரத முனிவர் ஒரு வேலை நிமித்தமாக அங்கு வர, யானை அவரருகே பவ்வியமாகச் சென்று வணங்கித் தனது பிரச்னையைக் கூறியது. தன் தலைவனுக்கு பெயரையும், புகழையும், இழந்ததனைத்தையும் மீட்டுத்தர வழியைக் கேட்டது..

நீண்ட ஆலோசனை செய்து, யானையின் துயர் துடைக்க உறுதி பூண்டு,அதற்கான வழியைக் கூறலானார். “கிரௌஞ்ச மலையை” தனது வேற்படையினாலே,எளிதாகப் பிளந்த முருகப் பெருமானை வழிபடும் முறையையும், மந்திரங்கள் மற்ற விஷயங்களை எல்லாம் தெளிவாக எடுத்துக்கூறி விடை பெற்றார். 

இதைக்கேட்ட பின்பு, யானை,அவர் கூறியபடி, திருச்செந்தூர் தலத்திற்கு வந்தது.

“முருகனைக் கூப்பிட்டு

முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே

உடல் பற்றிய பிணி ஆறுமே…….

குமரனைக் கூப்பிட்டுக்

கொண்டாடு வோருக்கு

குறைகள் யாவும் போகுமே

அவர் குடும்பம் தழைத் தோங்குமே……..

என்ற தத்துவங்களின் சாரத்தை மனதிலிருத்தி, கண்களில் நீர் வடியச் சரணாகதி அடைந்தது.

“என்று வேழத் திறையுளத் தெண்ணியே

நன்றுணர்ந்துள் நாரதன்

போற்றியே

குன்றெ றிந்த குருபரன்

பூசனைக்

கொன்று மந்திர மோதென

வோதினான்”

காரண காரியங்களைக் கடந்து நிற்கும் இப்படிப்பட்ட உண்மையான, உறுதியான அன்பைத் தன்னகத்தே கொண்டு, ஐந்து நாட்கள், இரவு பகலாக, ஊண் உறக்கமின்றி, இடையறாது, அன்போடு பூஜை செய்து வர, முருகப்பெருமான் திருவருளை முழுமையாகப் பெற்றது இந்திரனின் ஐராவதம் யானை.

-சுப்பிரமணியன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

G SaravanaKumar

நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

எல்.ரேணுகாதேவி

திமுக உட்கட்சித் தேர்தல் – புதிய அறிவிப்பு வெளியீடு

EZHILARASAN D