அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தலை வழங்க நாளை மாலை அதிமுக
எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மாலை 6 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து அலுவல் நாட்களிலும் அதிமுக எம்எல்ஏக்கள் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும், அதிமுக கட்சி பிரச்னையை சட்டமன்றத்தில் கொண்டுவரக் கூடாது. முன்னாள் அமைச்சர்கள் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடக்கூடாது, உள்ளிட்ட அறிவுறுத்தல்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.








