பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!

பரபரப்பான அரசியல் சூழலில்  தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.  இதுதொடர்பாக அனைத்து அமைச்சருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இன்று மாலை…

பரபரப்பான அரசியல் சூழலில்  தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.  இதுதொடர்பாக அனைத்து அமைச்சருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியதுள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.