சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் – புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை!

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி,  அவரது உருவப் படத்திற்கு புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசு சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு…

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி,  அவரது உருவப் படத்திற்கு புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி அரசு சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு
கடற்கரை சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவ படத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,  சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள்;பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!

பின்னர் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவு மற்றும் பள்ளி மாணவர்களின்
அணிவகுப்பு மரியாதையை  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.  பின்னர் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஒற்றுமை ஓட்டத்தையும் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.