தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். ஆனால்…. – தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் பேச்சு…!

தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அதிமுக தலைமை கேட்கவில்லை என்று தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் இன்று தவெகவில் இணைந்தனர். அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவர்ஜுனா உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது :

தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால் தலைமை செவிமடுக்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதையும் தலைமை கேட்கவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணாக திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தலைமை முயன்றது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.