ஜவுளி கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் 5 அடி கொம்பேறி மூக்கன் கொடிய விஷப்பாம்பு நுழைந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர்
பஜார் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகுராம் ஜவுளி கடை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு முன்பு அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென
இருசக்கர வாகனத்திற்குள் விஷப்பாம்பு நுழைந்தது. இதனை அடுத்து கடை உரிமையாளர் ரகுராம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையும் படியுங்கள்;ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தகவலின் பெயரில் விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்த சுமார் 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் கொடிய விஷபாம்பினை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்து சென்று காப்புகாட்டில் விட்டனர்.
தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி கொடிய விஷ பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டுக்குள் விட்டதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.







