மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக சார்பில் மரியாதை – அமைச்சர்கள் பங்கேற்பு!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தவெக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தவெக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மால் குமார், ராஜுவ், மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் சிறைத் துறையினருக்கு தொடர்பு உள்ளதா? எனும் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வி.வி.ஐ.பி வருவதால் ஜெனரேட்டர் மூலமாக இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி கோவிலுக்கு வரும் போது மின் தடை ஏற்பட்டது. மின்சார துறைக்குள் பணியாற்றும் அதிகாரிகள் வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்துகிறார்கள். தேனி சிறையில் கதவுகள் பூட்டப்படும் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை பயன்படுத்தி கைதிகள் தப்பித்து சென்றுள்ளனர். தேனி சிறை கண்காணிப்பாளருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்.சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சீரமைப்பதற்கு கடந்த பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்கியிருந்தோம். விரைவில் இவற்றை சரி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.