இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதற்கட்டமாக இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஆக்லாந்தில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு அஞ்சமிருக்காது.




