”அவங்க வீட்டிலேயே விசில் சத்தம்” – திமுக, பாஜகவை விமர்சித்து விஜய் பேச்சு…!

பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்தார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் ஆர் எஸ் முருகன், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜாண், ராதாபுரம் தொகுதி வேட்பாளர் கிரிஸ்டோபர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  பேசிய விஜய் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது ;

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் முழு பவர் இருந்திருந்தால் இந்நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக நடந்திருக்காது. திமுக மற்றும் பாஜக இருவரும் வெளியில் பார்க்கும் போது தனி தனி. ஆனால் இருவரும் ஒன்னு தான். உங்களுடன்.

உங்களுக்காக குரல் கொடுக்கும் விஜய் வந்துவிடக்கூடாது என்பது தான் திமுக, பாஜக இருவரின் நோக்கமும். ஊழல் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளதால் என் மீது 2 கூட்டணியும் செம கோபத்தில் உள்ளனர். அவங்க வீட்டிலேயே அவங்க குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்பதால் செம காண்டில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் கையில் போட்டுக் கொண்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் இருக்கிறார்கள். கட்சி ஆரம்பித்து ஒவ்வொரு குடும்பத்திற்குள் நான் நுழையவில்லை. அதற்கு முன்பே நான் நுழைந்துவிட்டேன்”

என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.