சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் 19 பேரை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பரிந்துரை குழுவான கொலீஜியம் கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்திருந்தது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 8 வழக்கறிஞர்கள், 7 நீதித்துறை அதிகாரிகள் என மொத்தம் 15 பேரை நீதிபதிகளாகவும் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்:
- கோவிந்தராஜன் கிருஷ்ணசுவாமி
- ராஜேஷ் பதியியல்
- ரமேஷ் நடராஜன்
- ஜி.கே. முத்துக்குமார்
- ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன்
கூடுதல் நீதிபதிகள்:
- ரவிகுமார் சங்கரநாராயணன்
- திலீப் குமார் நாகராஜன்
- எல்லப்பன் மனோகரன்
- டாக்டர் பி. முருகன்
- எம்.டி. சுமதி
- எஸ். அல்லி
- சி. திருமகள்
- சண்முகம் கார்த்திகேயன்
- முருகேசன் பாலுச்சாமி
- என். குணசேகரன்
இதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
.




