ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. டெல்லில் அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக முந்தைய போட்டியில் விளையாடாத நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என சாய் சுதர்சன் தகவல் அளித்துள்ளார்.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை மொத்தப் போட்டிகள் 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 3 முறையும், குஜராத் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச அணி
டெல்லி : கே.எல்.ராகுல் (வி.கீ), பாத்தும் நிசாங்கா, நிதிஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கே), விப்ராஜ் நிகம், லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன்
குஜராத் : ஷுப்மான் கில் (கே), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (வி.கே), கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா/ஜேசன் ஹோல்டர், அசோக் சர்மா, முகமது சிராஜ்,







