“இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், “இதுவரை 5 கோடியே 53 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் 25 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் மருத்துவ முகாம் நடத்திய போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. பின்பு ஓமிக்ரான் மூன்றாம் அலையில் தமிழ்நாட்டை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். கோவிட் நோயாளிகள் படுக்கை நில் (nil) என்று வந்திருக்கிறது” என்று தெரிவித்தார். மேலும் மக்களிடையே கொரோனா தொற்று குறைந்து விட்டாலும் மக்கள் விழிப்புணர்வுடனேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, மாநிலத்தில் இதுவரை 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் விரைவில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.