முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

பொதுமக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,970 ஆக உயிர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பொதுமக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் விருப்பம்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

G SaravanaKumar

விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும்: கமல்ஹாசன்

Saravana

மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

Vandhana