குளங்கள் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அதிரடி

காஞ்சிபுரம் அருகே  குளத்தை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் உணவு விடுதி நடத்தி வந்ததைக் கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரிடமிருந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அதிரடியாக மீட்டனர்.  தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு…

காஞ்சிபுரம் அருகே  குளத்தை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் உணவு விடுதி நடத்தி வந்ததைக் கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரிடமிருந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அதிரடியாக மீட்டனர். 
தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க
வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் பேரில் அனைத்து நீர் நிலைகளையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சிட்டியம்பாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை ஆக்கிரமித்து, திமுக பிரமுகர் ஜெய்சங்கர் என்பவர் உணவு விடுதி நடத்தி வந்ததை வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், அந்த விடுதியை அதிரடியாக அகற்றினர். மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.