31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் என்.ஐ.ஏ. உட்பட புலனாய்வுத் துறை அதிகாரிகள் குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலானது கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு 9.37 மணிக்கு வந்து கொண்டிருக்கும் போது D1 பெட்டியில் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதையும் படியுங்கள் : மதுரை சித்திரை திருவிழா பணிகளுக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

இதனால் அலறியடித்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடினார். பிற பயணிகள் இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், தீக்காயம் அடைந்த பயணிகளை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டதில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் மற்றும் ஆண் சடலம் தீ காயங்களுடன் கண்டெடுக்கபட்டது. மேலும் ஆய்வு செய்ததில் ரயில்வே தண்டவாளத்தில் பேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒரு மொபைல் போன், பெட்ரோல் நிறைந்த ஒரு பாட்டில் மற்றும் ஒரு டைரி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

போலீஸ் விசாரணையில், அந்த டைரியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உட்பட சில ஊர்களின் பெயர்கள், கோடுகள், சில காவல் நிலைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தீவிரவாதிகள் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீவிரவாத தடுப்புபிரிவு அதிகாரிகள், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கேரளா மாநில காவல்துறை டிஜிபி அனில் காந்த் உட்பட அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சந்தேகத்தின் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒருவரை கேரள மாநில புலனாய்வுத்துறை காவல்துறையினர் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஓடும் ரயிலில் தீ வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளியான ஷாருக் சைபி என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் ரத்தின கிரி பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷாருக் சைபி, மகாராஷ்டிரா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

புரோட்டாவுக்கு தயிர்வெங்காயம் கொடுக்காததால் விறகு கட்டையால் அடி! போலீஸ் வரை சென்ற விவகாரம்!

Web Editor

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பழங்குடியின மக்கள்

EZHILARASAN D

தமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

G SaravanaKumar