அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்தாலும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கருணாநிதி – எம்ஜிஆர்…. இருவருக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி சொல்கிறார் கவிஞர் வாலி.
துப்பாக்கி குண்டு பாய்ந்து உடல்நலம் பெற்ற எம்ஜிஆர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நீரும் நெருப்பும் திரைப்படத்தில் நடித்து வந்த அவரிடம் ‘எங்கள் தங்கம்’ திரைப்பட பாடல் வரிகளைக் காட்ட சென்றார் வாலி. ‘நான் செத்துப் பிழைச்சவன்டா, எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” எனத் தொடங்கிய பாடலைக் கேட்டு எம்ஜிஆருக்கு
அந்த சமயத்தில் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி, ரயில் பாதையில் தலை வைத்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் வரிகளை சேர்க்க கூறினார் எம்ஜிஆர். கருணாநிதியை போற்றும் வகையில் “ஓடும் ரயிலை இடைமறித்து …” என்ற வரிகளை எழுதினார் வாலி…
எந்த சூழ்நிலையிலும் கருணாநிதி என குறிப்பிடாமல் கலைஞர் என சொல்வதுதான் எம்ஜிஆரின் வழக்கம்… அதே ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்திற்காக நான் அளவோடு ரசிப்பவன் என எம்ஜிஆருக்காக முதல் வரியை எழுத, அடுத்த வரிக்காக வாலி யோசித்த நிலையில், அருகில் இருந்த கருணாநிதி, எதையும் அளவின்றி கொடுப்பவன் என்ற அடுத்த வரியை எடுத்துக் கொடுக்க…அந்த ஹிட் பாடல் உருவானது.
ஒருநாள் வாலியை அழைத்த எம்ஜிஆர் அன்பு மிகுதியால் வாலியின் கன்னத்தில் முத்தமிட, என்னண்ணே விசேஷம் முத்தமெல்லாம் தர்றீங்க எனக்கேட்டார் வாலி. எதையும் அளவின்றி கொடுப்பவன் என எழுதிட்டீரே என பாராட்ட பதிலுக்கு வாலி, முத்தத்தை கருணாநிதிக்கு கொடுங்க… இந்த வரியை எழுதியது அவர்தான் என பதில் அளித்தார்.
அரசியலில் பின்னர் இருதுருவமாக மாறி, நீரும் நெருப்புமாக இருந்தாலும் அவர்களுக்கிடையே நீறுபூத்த நெருப்பாக இருந்த நட்பு போற்றிப்பாராட்ட வேண்டிய அம்சம்தானே.









