அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
பின்னர் ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, அம்மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பழம்பெரும் ஒசாகா கோட்டையை பார்வையிடுமாறு அவர் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்றுக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகா கோட்டைக்கு சென்று பார்வையிட்டார்.
இன்று டோக்கியோ சென்ற அவருக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதாக கூறினார். தமிழை காப்பது தமிழினத்தை காப்பதாகும் என தெரிவித்த அவர், தமிழ்நாட்டிற்கும், ஜப்பானிற்கும் இடையே அதிக தொடர்பு உள்ளதாக கூறினார். ஜப்பானிய தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் எனவும் என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.