தமிழ்நாட்டிற்கு எப்போதும் வடக்கில் இருந்து தான் ஆபத்து வரும் ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!

தமிழ்நாட்டுக்கு எப்போதும் வடக்கில் இருந்து தான் ஆபத்து வரும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பரப்பரை செய்தார். அப்போது  பேசிய அவர்,

“தமிழ்நாட்டுக்கு  எப்போதும் வடக்கில் இருந்து தான் ஆபத்து வரும். என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக்கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்கிற சவாலில் வெற்றி பெற வேண்டும்.

தமிழ்நாடு முழுக்க பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவுக்கே ரோல் மாடலாக தமிழ்நாடு உள்ளது. கலைஞர் சொல்லிக் கொடுத்தது எல்லாம் உழைப்பு. உழைப்பு, உழைப்பு. உண்மையாக உழைத்தால் உலகம் நம்மை போற்றும்.

தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்பது ஆர்.என்.ரவியின் குரல் அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். குரல். நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா?” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.