தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் தொடரில் 3 தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அசத்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் நவீன் ஹோவி. 42 வயதாகும் இவர், தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் தொடரில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லக்ஷ்மி நாராயணன் என்பவரிடம் பல மாதங்கள் பயிற்சி பெற்ற நவீன், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். நாள்தோறும் ஜிம், நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சாந்தோம் மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்ற நவீன், பின்னர் டெரெக் ஹட்சன் என்பவரது கிளப்பில் இணைந்தார்.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
நவீன், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 35வது மலேசியன் சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், “நான் குண்டு எறிதலில் 12 மீட்டர்கள், வட்டு எறிதலில் 35 மீட்டர்கள் மற்றும் ஈட்டி எறிதலில் 40 மீட்டர்கள் கடக்கும் வகையில் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஃபிலிப்பைன்ஸில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் நான் முன்னேற்றம் காண வேண்டும்.
இந்த உலகத்தில் எதுவும் சாத்தியம். வயதானவர்கள் எந்த போட்டிகளிலும் கலந்துகொண்டு முடியாது என்று நினைக்கிறார்கள். 2021ல் எனது தந்தை காலமானார். ஹோவி என்ற பெயரை மக்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவார். அதனை எப்படி செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான வழியை நிச்சயம் கண்டுபிடிப்பேன்” என்று தெரிவித்தார்.