தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களே – எடப்பாடி பழனிசாமி பேச்சு…!

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் தான் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

“அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் தான் தமிழ்நாட்டில் இப்போது தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் உழைப்பை மு.க. ஸ்டாலின் அறுவடை செய்து வருகிறார்.

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை திமுக அவமதித்து வருகிறது. காமராஜரை அவமதித்த திருச்சி சிவாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டித்தாரா?

பணம், நகையை திருடுவார்கள். ஆனால் திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்னி முறைகேடு குறித்து விசாரிக்கப்படும். ஸ்கேன் செய்து உடல் உறுப்புகள் சரியாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.