ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்துள்ளது. ஐதராபாத் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளியிப்படுத்திய இஷான் சதம் 91 ரன்கள் விளாசினார். மற்றொரு ஆட்டக்காரரான கிளாசன் 40 எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்க உள்ளது.







