”செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது!!” – மல்யுத்த வீரர்கள் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது பதவிக்காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுகள்…

மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது பதவிக்காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீராங்கனைகள் பேரணி செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்தபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டனர்.

https://twitter.com/mkstalin/status/1662791849864753155

மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.