தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உண்மையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ”AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!” – உருகுவேயில் திமுக எம்பி வில்சன் உரை
சுகாதாரத்துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்கால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக குறைகூறியுள்ள அவர், கடந்த 2 மாதங்களில் எத்தனை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.







