தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லையா? பாஜக வெளிநடப்புக்குப் பின் நயினார் நாகேந்திரன் கேள்வி…

திமுக அரசு தனது செல்வாக்கை இழந்து கொண்டே வருவதாக சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது…

திமுக அரசு தனது செல்வாக்கை இழந்து கொண்டே வருவதாக சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

உயர்கல்வியில் தமிழகத்துக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து தரக்குறைவாக பேசுகின்றனர். இது வருந்தத்தக்கது.  வேதனைக்குரியது.

திமுக தன்னுடைய செல்வாக்கை இழந்துகொண்டே வருகிறது.  சிறப்புக் கூட்டத்துக்கான அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.  தமிழகத்தில் மக்கள் பிரச்னை ஏராளம் உள்ளது. மின்கட்டண உயர்வு அதிகரித்துள்ளது.  வீட்டு வரி உயர்வு 100 மடங்கு கூடியுள்ளது. இவை அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பட்டியலின மக்களுக்கு தாக்குதலும் அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது. இதை மறைப்பதற்காக ஆளுநர் விவகாரத்தை கையில் எடுக்கிறது திமுக.

வேந்தர் பதவியில் முதல்வர்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இவை அவசியம்தானா? நாட்டில் வேறு பிரச்னைகள் இல்லையா? மக்கள் பிரச்னையை மையப்படுத்தாமல்,  ஆளுநரின் நடவடிக்கையை மையப்படுத்துகின்றனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.