கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல இனி பேச மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை..!

காங்கிரஸ் கட்சியினர் இனி கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல பேச மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது :

ராகுல் காந்தி நாளை மதியம் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகின்றார். பள்ளி விழா, சமத்துவபொங்கல் ஆகியவற்றில் பங்கேற்கின்றார்.

தவெக தலைவர் விஜயை விசாரணை என்ற பெயரில் அரசியல் மற்றும் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கின்றது. ஆனால் அந்த முயற்சி பலிக்காது. சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட கதையாக விஜய் சிக்கி இருக்கின்றார். நாகரீகமாக பேச தெரியாதவர் அண்ணாமலை.

இந்தியா கூட்டணி வலுவாக இருக்கின்றது. மேலும் அது பாசிச சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடாது. கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும். கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் இனிமேல் பேச மாட்டார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.