தேசிய இளைஞர் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…..!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நினைத்ததை முடிக்கும் திறன் படைத்தவராய் இளைஞர்கள் உருவாக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொது செயளாலர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இளைஞர்களின் வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாளான இன்று, தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று சுவாமி விவேகானந்தரின் அரும்பணிகளை நினைவுகூர்வதுடன், அவர் கூறிய “All power is within you; you can do anything and everything” என்ற பொன்மொழியை இளைஞர்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன்.

இளைஞர்களே- எதையும் “முடியாது” என கடந்துவிடாதீர்கள். எதையும் சாதிக்கும் திறம் உங்களுக்கு உண்டு. நீங்கள் நினைத்தால், மாறாது என்று பிறர் சொல்லும் யாதும் மாறும். நினைத்ததை முடிக்கும் திறன் படைத்தவராய் நம் இளைஞர்கள் அனைவரும் உருவாக இந்த தேசிய இளைஞர் தினத்தில் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.