காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

குளித்தலை அருகே கடம்பர் கோவில் காவிரி ஆற்று பகுதியில் குளிக்கச் சென்ற இரு சகோதரர்களின் உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் பகுதி காவிரி ஆற்றில் அதிக…

குளித்தலை அருகே கடம்பர் கோவில் காவிரி ஆற்று பகுதியில் குளிக்கச் சென்ற இரு சகோதரர்களின் உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் பகுதி காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் சென்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். அவரது இரு சகோதரர்கள் என மூன்று குடும்பத்தினரும் சேர்ந்து அப்பா நடேசனுக்கு திதி கொடுப்பதற்காக தனது சொந்த ஊரான தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்திற்கு சென்றனர். அங்கிருந்து வீரப்பூர் கோவில் சென்று கொண்டிருந்த பொழுது குளித்தலை கடமனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றுப்பகுதியில் குளித்துவிட்டு செல்லலாம் என்று குளிக்க சென்றனர்.அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஜெயபாலனின் இரு மகன்கள் அருணாச்சலம் மற்றும் வெங்கடாசலம் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி அடித்து சென்றனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வெங்கடாசலத்தை நேற்று சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய குளித்தலை போலீசார் குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் ஒருவரை முசிறி தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் உடல் கடம்பர் கோவில் காவேரி ஆற்று அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டது.

இதனையடுத்து குளித்தலை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி ஆற்று பகுதியில் யாரும் குளிக்க செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.