ஜூலை 11-ம் தேதி, நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் மீண்டும் இரட்டை தலைமையே அதிமுகவில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
2022 ஏப்ரல் 6 தேதி :
அதிமுக தலைமை அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் குறித்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆலோசனை நடத்தினர். அப்போது, நிர்வாகிகளிடையே வாக்குவாதம். கட்சி பதவிகளில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருந்ததால் ஒப்புதல் கடிதத்தில் ஓ.பி.எஸ் கையொப்பமிட மறுப்பு.
2022 ஜூன் 2 :
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ல் நடைபெறும் என்றும் தற்காலிக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடபெறும் என்றும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அறிவிப்பு
2022 ஜூன் 12:
செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஜூன் 14-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் என ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அறிவிப்பு
ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து பெரும்பாலானோர் பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
2022 ஜூன் 16:
ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம், தனக்கு மிகப்பெரிய வருத்தம் அளிப்பதாகவும், 14 பேர் கொண்ட உயர்மட்ட குழுவின் முடிவுக்கு தலை வணங்குவேன் என்றும் ஓ.பி.எஸ் அறிவிப்பு.
2022 ஜூன் 19:
பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் இ.பி.எஸ் வரவில்லை என்பதால், இருவரும் இல்லங்களில் தனி தனியாக ஆலோசனை நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
2022 ஜூன் 22:
சென்னையை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் வழங்கிய மனு நிராகரிப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்றும் 23 தீர்மானங்களை மட்டுமே விவாதிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு.
பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் வருகை, தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத் தலைவராக நியமனம். தீர்மானங்கள் நிராகரிப்பு. பொதுக்குழுவில் இருந்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். ஓ.பி.எஸ்சை எதிர்த்து கண்டன முழக்கம் மற்றும் ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீச்சு அரங்கேறியது.
2022 ஜூன் 24:
ஒருங்கிணைப்பாளரான தன் கையெழுத்தின்றி ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் முறையீடு
2022 ஜூன் 28:
ஓ.பி.எஸ் புகாருக்கு தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் பதில் மனு தாக்கல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமைக்கு வற்புறுத்தியதால், ஓ.பி.எஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகிறார் என குற்றச்சாட்டு.
2022 ஜூலை 6:
அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம் தொடர்பாக தடை விதிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2022 ஜூலை 7:
பொதுக்குழுவுக்கு தடையில்லை: கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது இ.பி.எஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2022 ஜூலை 11:
பொதுக்குழுவுக்கு தடையில்லை என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு. ஒருபுறம் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். இரு தரப்பினரிடையே மோதல் அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இபிஎஸ் சும், ஓபிஎஸ்சும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பு.
2022 ஜூலை 29:
பொதுக்குழு குறித்த மேல் முறையீட்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவு.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குறித்து ஓ.பி.எஸ் அதிருப்தி. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம். நீதிபதியிடம் ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்துவும் மன்னிப்பு கேட்டனர். நீதிபதி ஜெயசந்திரன் அமர்வில் ஆகஸ்ட் 10 , 11-ம் தேதிகளில் விசாரணை.
2022 ஆகஸ்ட் 17: (இன்று)
ஜூலை 11-ம் தேதி, நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக வை ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் என்ற இரட்டை தலைமைகளே இயக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பின் மூலம் தெரிவித்துள்ளார். இனி இபிஎஸ் அணி, ஓ.பி.எஸ் அணியோடு மீண்டும் இணைந்தே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் சட்ட போராட்டம் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ரா.தங்கபாண்டியன்











