லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர்!

உசிலம்பட்டியில் புதிய மின் கம்பம் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் கலவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம்…

உசிலம்பட்டியில் புதிய மின் கம்பம் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும்
கலவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராஜ்.
இவருக்கு சொந்தமாக உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள விட்டல்பட்டியில் உள்ள இடத்தில் பால் குளிரூட்டும் மையம் அமைப்பதற்கு மின் இணைப்பு வழங்கவும்,
புதிய மின் கம்பங்கள் அமைக்கவும் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் உசிலம்பட்டி உப மின் நிலைய செயற்பொறியாளர் அழகு மணிமாறனின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. இந்நிலையில் செயற்பொறியாளர் அழகு மணிமாறன் மின் கம்பங்கள் அமைக்க பரிந்துரை செய்ய மனுதாரர் சுப்புராஜூவிடம் ரூ.40 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு சுப்புராஜ் புகார்
அளித்த சூழலில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் ரூபாயை முதற்கட்ட தொகையாக வழங்குவது போல சுப்புராஜ் கொடுத்துள்ளார். ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின் செயற்பொறியாளர் அழகு மணிமாறனை மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கையும் கலவுமாக கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.