சாத்தூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை உற்சவ திருவிழா; இஸ்லாமிய தம்பதி பங்கேற்பு!

சாத்தூரில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை மாத உற்சவ திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து வந்த பக்தரிடம், தனது கைக்குழந்தையுடன்  இஸ்லாமிய தம்பதி ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமைந்துள்ள…

சாத்தூரில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை மாத உற்சவ திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து வந்த பக்தரிடம், தனது கைக்குழந்தையுடன்  இஸ்லாமிய தம்பதி ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்  உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வருகின்ற 13ம் தேதி வரை நடைபெறும் நிலையில், திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்ட்டு அலங்கார வாகனத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக பறவைக் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பெண் பக்தர்  ஒருவர் பறவைக்காவடி எடுத்து  நகர்வலம் வரும் போது இஸ்லாமிய தம்பதியினர் தனது கைக்குழந்தையுடன் பெண் பக்தையை வணங்கி ஆசி பெற்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மத நல்லிணக்கத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவலாகி வருகிறது.

ரூபி.கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.