கேரள மாநிலம், கொல்லம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் மருத்துவர்
கொலை தொடர்பாக, மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என காமன்வெல்த் மருத்துவ சங்க பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம், கொட்டாரக்கரை சேர்ந்தவர் வந்தனா தாஸ். இளம் பெண் டாக்டரான
இவர் பணியில் இருந்தபோது மனநிலை சரியில்லாத ஒருவர் வீட்டில் ரகளை செய்ததால், அவரை போலீசார் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். டாக்டர் வந்தனா சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, திடீர் என கத்திரியை எடுத்து வந்தனா தாசின் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காமன்வெல்த் மருத்துவர் சங்க பொதுச் செயலாளரும், கன்னியாகுமரி
மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் ஜெயலால்
விடுத்துள்ள கோரிக்கையில், இளம் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம்
குறித்து, உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
—-கு. பாலமுருகன்







