“பாஜக – அமமுக இடையே கூட்டணி உறுதியாகிவிட்டது” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு…

பாஜக-அமமுக இடையே கூட்டணி உறுதியாகிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் பாஜகவிற்கு தருகிறோம் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.  நாங்கள்…

பாஜக-அமமுக இடையே கூட்டணி உறுதியாகிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் பாஜகவிற்கு தருகிறோம் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.  நாங்கள் எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோம்? என்பது முக்கியமல்ல.  எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பாஜகவிடம் இருந்து எந்த நிர்பந்தமும் வரவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரிகாரப்பூர்வமாக இன்று என்னை தொடர்பு கொண்டார்.  இந்த காலகட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு எது தேவையோ அதன் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம்.  இந்தியாவின் வளர்ச்சிக்காக இந்த காலக்கட்டத்திலே தேவையான ஒரு கட்சி பாஜக.

தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்கவும் எங்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.  அதே நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உரிமைகளையும் கேட்டு பெற தயங்க மாட்டோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.