ஓட்டலில் ரூம் சர்வீஸ் செய்யும் பணியில் ‘ரோபோ’ – வீடியோ வைரல்!

சீனாவில் ஓட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் செய்யும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட…

சீனாவில் ஓட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் செய்யும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இதனால், இந்த தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சீனாவில் ஓட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் செய்யும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஷாங்காய் நகரில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் உணவை ஆர்டர் செய்கிறார்.  சிறிது நேரத்தில் அவரின் அறைக்கு ரோபோ உணவை கொண்டு செல்கிறது.

பின்னர் அவர் அந்த ரோபோவில் உள்ள ஓப்பன் என்ற பட்டனை அழுத்தியதும் அதன் மேல்பகுதி திறக்கிறது.  உள்ளே இருந்த உணவு பார்சலை அவர் பெற்றுக் கொண்டதும், மீண்டும் ரோபோவின் மேல் பகுதி மூடி விடுகிறது.  அதன் பிறகு அந்த ரோபோ சென்று விடுகிறது.  இந்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.