தமிழகம் பக்தி செய்திகள்

உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் துகிலியில் அம்மனை அழைப்பதற்காக பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டு அழைக்கும் வினோத வழிபாடு காலம் காலமாக நடைபெற்று வருவது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இத்திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ளது துகிலி கிராமம்.பட்டு உற்பத்திக்கு பெயர் போன இங்குள்ள ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இவ்வம்மனை இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.இக்கோவிலில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹோத்சவ ஜோதி விழா வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இத்திருவிழா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மஹோத்சவ ஜோதி இந்தாண்டு சில நாட்களுக்கு முன்னர் வெகு விமர்சையாக தொடங்கியது.அதுமுதல் பக்தர்கள் தங்கள் கைகளில் காப்பு கட்டி விரதமிருக்க தொடங்கினர்.சக்திஹோமம்,கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திருவிழா காலங்களில் தினமும் துகிலி காவிரி ஆற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது உடலில் கத்தியால் வெட்டிக்கொண்டு பாடல்களை பாடி அம்மனை அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மூன்றாவது நாளாக மங்கள வாத்தியங்களுடன்,வாண வேடிக்கைகள் வெடிக்க புனித நீர் மற்றும் பால்குடங்கள் யானையின் மேல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி தங்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டு அம்மனை அழைத்தனர்.

—-வேந்தன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உழைப்பால் திமுகவில் உயர்ந்தவன் நான்: மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

திமுக உட்கட்சி தேர்தல் – இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு

EZHILARASAN D

ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

G SaravanaKumar