பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி!

சிவகங்கையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான முதலாவது தேசிய சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளையாட்டில் மாற்றுதிறனாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு, தன்னார்வலர்கள் என பலர் அவர்களுக்கென தனியே மாநில மற்றும் தேசிய அளவிலான…

சிவகங்கையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான முதலாவது தேசிய சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விளையாட்டில் மாற்றுதிறனாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் அரசு, தன்னார்வலர்கள் என பலர் அவர்களுக்கென தனியே மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கல்லுப்பட்டியில் அமைந்துள்ள கலாம் கல்வி கிராமத்தில் விழித்திறன் குறைபாடுடையவர்களுக்கான முதலாவது தேசிய அளவிலான ஃபிடே ரேட்டிங் சதுரங்க போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேதுபாஸ்கரா வேளான்மை கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்பதெற்கென இந்தியா முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்,வீராங்கனைகள் வந்திருந்தனர்.

இப்போட்டிகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காரைக்குடியில் உள்ள பெரியார் சிலை முதல் தேவர் சிலை வரை பேரணி நடைபெற்றது.இப்பேரணியை கல்லூரியின் தாளாளர் சேது குமணன் மற்றும் தமிழ்நாடு
பிரெய்லி சங்க தலைவர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.இப்பேரணியில் பார்வைத்திறன் குறைபாடுடைய வீரர்கள்,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.