தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மக்களிடையே தனி கவனம் பெற்ற திட்டம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தவெக ஆட்சி அமைந்து விஜய் முதலமைச்சர் ஆனதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால முதலம்மைச்சர் விஜய் லண்டன் சுற்றுப்பயணம் சென்றதால் செப்.28 -ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடக்க உள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்கவிழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உசிலம்பட்டியில் குறுகிய சாலைகளே உள்ளதால கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதாலும், பாதுகாப்பு காரணமாகவும் துவக்க விழா மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையின் தாய்-சேய் வார்டில் நடக்கவிருந்த துவக்க விழா குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்புள்ள காரணத்தால் மருத்துவமனையில் உள்ள அறங்கிற்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.

இன்று நடக்கவுள்ள தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் துவக்கவிழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் காலை 9 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை வளமாக ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று 12 மணியளவில் சுமார் 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சிறிய ஓய்வுக்கு பின்னர் மாலை 4 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மின்னர் 5 மணியளவில் மீண்டு சென்னை புறப்படுகிறார்.

முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல மீனாட்சி அம்மன் கோவிலிலும் இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.