கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!

கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்போது கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான…

கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்போது கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,

டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கோயில்கள் திறக்கப்படாத ஏன்னென்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வந்த பிறகு கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனக் கூறினார்.

மேலும், சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேகமாக குறைந்து வருகிறது என்றார்.

கோயில்களில் கடந்த ஆண்டு 2020 நடைபெற்ற சிறப்பு பூஜைகள் இந்தாண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை என்ற கேள்விக்கு, பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு பூஜைகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவில்லை எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.