திருவள்ளூர் அருகே தனியார் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் அதிகாலை 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்றதா ? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







