முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்: மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கப்படும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுவருகிறார் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் இருப்பதால், அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்படும். நீட் தேர்வு பாதிப்புக்கள் குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த குழு இதுவரை நான்கு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இது தொடர்பாக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது. பின்னர் ஏ கே ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமரும் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. ஆனால் எதிர்க்கட்சியின் துணைத்தலைவர், நீட் தேர்வு ஏதோ இப்போது வந்ததுபோல இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது. இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இந்த தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தடை ஆணை பெற்றார்.

ஆனால் அதற்கு பிறகு 2017-யில் அதிமுக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நுழைவு விலக்கு அளிக்கவேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பிறகு இந்த தீர்மானத்திற்கு முந்தைய அதிமுக அரசு சார்பில் போதுமான அழுத்தம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி தீர்மானத்தைத் திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஹாங்காங்கை அச்சுறுத்தும் கொரோனா தொற்று.

Halley Karthik

பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

Ezhilarasan

சிறுமியை கடத்திய வாலிபர் ஓராண்டு கழித்து கைது!

Saravana Kumar