ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது…

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களில், கடந்த நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சென்னையில் உள்ள அருணாச்சலம் இம்பேக்ஸ், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் குரூப் போன்ற தனியார் நிறுவனங்களில், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும், கணக்கில் காட்டாத ரூ.12 கோடி ரொக்கம் சிக்கியதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், மேலும் சிலவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.